Total Pageviews

Saturday, 6 April 2013

இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன ? இதயத்தில் உள்ள அறைகளில் குறைவான அழுத்தத்தை பெற்றுள்ள அறைகள் எவை ? இதயத்தில் உள்ள அறைகளை பிரிக்கும் தடுப்புச்சுவர் மெல்லியதா ? தடினமானதா ?


இங்கே உருவாக்கப்படும் கேள்வி பதில்கள் காப்புரிமைக்கு உட்பட்டது. தமிழ் மொழியை நன்கு அறிந்தவர்கள்,இவற்றை படிக்கும் நிலையில் - எழுத்தில் அல்லது கருத்தில் தவறுகள் ஏதும் இருப்பின் எனக்கு தெரியப்படுத்தவும். நன்றியுடன் மாற்றிக்கொள்கிறேன். அன்புடன் , டாக்டர்.மு.செம்மல்



கேள்வி: இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன ?
பதில்: நான்கு , Atria இரண்டு ; ventricles இரண்டு ; இவை இரு வேறு விசையியக்க குழாய்கள் போல செயல்படும் தன்மை உடையவை. அவை அருகருகே தொடராக அமையப்பெற்றுள்ளன.
 
 
 
 
கேள்வி: இதயத்தில் உள்ள அறைகளில் குறைவான அழுத்தத்தை பெற்றுள்ள அறைகள் எவை ?
பதில்: கீழறைகளை ஒப்பிடுகையில் ஊற்றறையில் ( Atria ) குறைவான அழுத்தம் உள்ளது , இதன் விளைவாக இந்த ஊற்றறைகள் இரத்தத்தை சேமிக்கும் பகுதிகளாக செயல்படுகின்றன , சேமிக்கப்படும் இரத்தம் கீழ் அறைகள் தளர்வு அடையும்பொழுது அவற்றை நிரப்பும் பணியை செய்கின்றன.
 
கேள்வி: இதயத்தில் உள்ள அறைகளை பிரிக்கும் தடுப்புச்சுவர் மெல்லியதா ? தடினமானதா ?
பதில்: ஊற்றறைகளை மெல்லிய தடிமன் கொண்ட தடுப்புச்சுவர் பிரிக்கிறது. இதயக்கீழறைகள் அதிக அழுத்தத்தை உடைய அறைகள்,நுரையீரல் மற்றும் புற திசுக்களுக்கு இரத்தத்தை கடத்த வேண்டிய பொறுப்பு இருப்பதால் அவை தடிமனான சுவரை பெற்றுள்ளன.
 
இதயத்தின் இடது கீழறையில் அதிகமாக அழுத்தம் காணப்படுகிறது. இடது கீழறை இதயத்தசை வலது கீழறை இதயத்தசையை விட தடிமனாக உள்ளது. இதயத்தின் கீழறைகளுக்கு இடையே அமைந்துள்ள இடைச்சுவர் ஒருவகையான சவ்வுக்குரிய Membraneous கட்டமைப்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment