Total Pageviews

Wednesday, 8 May 2013

எனது முயற்சி வெற்றி பெறுமா ? தோல்வி அடையுமா ?

நண்பர்களே

சைபர் தமிழ் சங்கம் மூலமாக ஒரு புதுமையான பயணத்தை துவங்குகிறேன்

ஒரே சமயத்தில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுகளையும் அறிவியல் தமிழ் வளர்ச்சியினையும் இணைக்க முடியுமா ?

இப்படி செய்வதன் மூலம் அறிவியலும் வளரும் , நம் தமிழும் வளரும்

அறிவியல் செய்திகளை மாணவர்கள் குருவிகளை போல கொண்டுவந்து சேர்க்கும் நிலையில் பெரியவர்கள் - மொழி அறிஞர்கள் - அவர்களை வழிநடத்தி தமிழ்படுத்தி - மொழி வளர்க்க முடியுமா ?

மாணவர்கள் ஆய்வுகளை செய்து அறிவியல் கருத்துக்களை உள்வாங்கும் நிலையில் அவர்களுடன் அறிவியல் தமிழின் பயணத்தை இணைப்பது சாத்தியமா ?

ஒரு பக்கம் மாணவர்கள்

ஒரு பக்கம் மொழியியல் அறிஞர்கள்

நடுவில் நான்

முயன்று பார்க்கும் நேரம் இது

எனது முயற்சி வெற்றி பெறுமா ? தோல்வி அடையுமா ?

தயக்கமின்றி மனதில் தோன்றுவதை கூறவும்

எனது முயற்சி தோல்வி அடையும் என்று கூறுபவர்கள் ஏன் அது நிகழும் என்று தயவு செய்து கூறவும்

அனைத்தையும் சைபர் தமிழ் மன்றம் குறித்துக்கொள்ளும்




கர்ப்பமுற்ற பெண்களின் மூளையின் செயல்பாடுகளும் அவர்களின் இரத்தத்தின் தன்மையும்
___________________________________________________________
சூரிய ஒளியின் வலிநீக்கும் தன்மைகள் 
___________________________________________________________

இசையும் மனித மூளையும்

___________________________________________________________

வழுக்கியும் வாயாற் சொலல்


__________________________________________________________


மொழி அறிஞர்களின் கருத்து.....

வாழ்க ஐயா .உங்களின் ஒவ்வோர் அங்குல முன் நகர்வும் வெற்றிதான் ....மற்றதைப் பற்றிய சிந்தனை ஒதுக்குங்கள் .. சில இடங்களில் அது தடைபோல் எதிர்ட்பட்டாலும் ...படிக்கல்லாக மாற்றிக்  கொள்ளும் திறன் உங்களுக்குண்டு என்பது எமக்குத் தெரியும்” - துரை.ந.உ vce.projects@gmail.com May 2013 

___________________________________________________________

நீதிமொழிகள் 21:31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். 
By DEV RAJ rdev97@gmail.com – May 2013-05-09
___________________________________________________________



1 comment:

  1. கட்டாயம் வெற்றி பெறும் செம்மல். வெற்றி பெற வேண்டும். பலரும் விரைந்தோ காலம் தாழ்ந்தோ வந்து சேர்ந்து கூட்டாக்கம் நல்குவர். விடா முயற்சியுடன் தொடருங்கள். உங்கள் ஊக்கத்தையும் உணர்வையும் நேரில் கண்டவன் என்னும் துணிவில் இதனை அன்புடனும் உறுதியுடனும் உரைக்கின்றேன். உரிய வளர்ச்சி கட்டாயம் கிட்டும். நீங்கள் கேட்டிருக்கும் 'முடியுமா?' என்னும் எல்லா கேள்விகளுக்கும் முடியும், கட்டாயம் முடியும் என்றே விடையிறுப்பேன். தமிழில் தங்கள் கருத்துகளைப் பகிர முற்படுபொழுதும் அவர்கள் மிக ஆழமாக தங்கள் ஆய்வுள்ளம் விரிவடைவதை, ஒரு விடுபாட்டு உணர்வுடன் புதிய கோணத்தில் சிந்திக்கத் தொடங்குவதை உணர்வார்கள் (பெரும்பாலானோர்). அறிவியல், பொறியியல், மருத்துவ, அறிவுப் பயணம் யாவுமே தங்கள் தாய்மொழியில்தான்இயல்பாகவும் சிறப்பாக நடக்கும் (மிகப் பெரும்பாலானோர்க்கு).

    ReplyDelete